கட்டணக் கொள்ளையில் தனியார் ஆம்னி பேருந்துகள் பெர்மிட்டுகளை ரத்து செய்ய வாலிபர் சங்கம் கோரிக்கை
சென்னை, அக். 18 - தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு, பொது மக்களைச் சுரண்டுவதைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கான ஒருங்கிணைந்த பயண முன்பதிவு செயலியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது. பண்டிகைக் கால விடுமுறையை ஒட்டி, வழக்கமான கட்டணத்தைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, சென்னை - திரு நெல்வேலி ஏசி ஸ்லீப்பர் பேருந்து களில் ரூ.1,700 ஆக இருந்த கட்ட ணம் தற்போது ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பயணச் செலவு மட்டும் ரூ. 20,000 வரை ஆவ தாக வாலிபர் சங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது. போக்குவரத்துத் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தும், கட்டணக் கொள்ளை குறையவில்லை என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் கட்டணக் கொள்ளை ஏழை, நடுத்தர மக்களைச் சுரண்டு வதோடு, தனி வாகனப் பயணத்தை ஊக்குவித்து போக்குவரத்து நெரி சல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கும் காரணமாகிறது. எனவே, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதி யான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி யுள்ளது. இந்தக் கோரிக்கைகளைச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வ ராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த முன்பதிவு செயலியே நிரந்தரத் தீர்வு
* ஒருங்கிணைந்த முன்பதிவு செயலி: அரசு ஒரு பொதுவான முன்பதிவு செயலியை உருவாக்கி, அதில் அரசு வகுத்துள்ள நியாயமான அடிப்படைக் கட்டணத்தை நிர்ணயம் செய்து, தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். * அனுமதி ரத்து: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் அனுமதி சான்றுகளை (பெர்மிட்) ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். *அரசுப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.