tamilnadu

img

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய  அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், திங்களன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் எங்களது சங்கத்தின் கீழ், 66 உறுப்பினர்கள் தள்ளு வண்டிகளில் டிபன் கடை, பழக்கடை, பிரியாணி கடை, துணிக்கடை, பூக்கடை, கடலைக்கடை, கம்மங்கூழ் போன்ற வகைகளுடன் கடந்த 20 வருடங்களாக வியாபாரம் செய்து வந்தனர்.  தற்போது மத்திய பேருந்து நிலையம், பஞ்சப்பூர் சென்று விட்டதால் இவர்களது வாழ்வாதாரமான வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் நேரில் தலையிட்டு, இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியிருந்தனர்.  மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது, சங்க துணைச் செயலாளர்கள் ஷேக் பாய், நத்தர் ஆகியோர் உடனிருந்தனர்.