tamilnadu

img

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வாடகை கார் ஸ்டாண்ட் அமைக்க இடம் கோரி மனு

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் வாடகை கார் ஸ்டாண்ட் அமைக்க  இடம் கோரி மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நம்பி தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் வாடகை கார் ஓட்டுநர்கள், தங்களுக்கான நிறுத்தங்களை மாநகராட்சி அனுமதியுடன் ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.  இந்த சூழ்நிலையில், மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூருக்கு சென்று விட்டது. எனவே எங்களது கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் வாடகை கார்கள் நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது சங்க பொருளாளர் ஆண்டனி சுரேஷ், தலைவர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.