tamilnadu

img

பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலமான புதிய பாலம் திறப்பு

பேராவூரணி  நெடுஞ்சாலைத்துறை மூலம்  அகலமான புதிய பாலம் திறப்பு

தஞ்சாவூர், ஜூலை 17-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மாநில நெடுஞ்சாலையான, முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையில், பேராவூரணியை அடுத்த ஏனாதிகரம்பை கல்லணை கால்வாய், பாசன வாய்க்கால் பாலம் மிகவும் குறுகலாகக் காணப்பட்டது.  இப்பாலத்தின் வழியே, ஒரு பேருந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில், இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், இப்பாலத்தை அகற்றி விட்டு, விரிவான புதிய பாலம் கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலைதுறை மூலம், பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அகலமாக விரைவில் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. கல்லணை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்குள், பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்க, துரிதமாக செயல்பட்ட கோட்ட பொறியாளர் செந்தில்குமார், தஞ்சாவூர் உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், பேராவூரணி உதவி பொறியாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஏனாதிகரம்பை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.