எழும்பூர் கெங்குரெட்டி பாலம் 3 நாட்களாக நிரம்பி கிடக்கிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளது.
தரமணி சிஎஸ்ஐஆர் சாலையில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் மாட்டிக் கொண்டவர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
சைதாப்பேட்டை ஆவின் பால் நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
சூளைப்பள்ளம் பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
தரமணி பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் வீடுவீடாக சென்று உணவு வழங்கப்பட்டது.