tamilnadu

img

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஓய்வூதியர்கள் தர்ணா

சென்னை, செப். 20 - திமுக அரசு தனது தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன் வலியுறுத்தி உள்ளர். ஓய்வூதியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி செவ் வாயன்று (செப்.20) தமிழகம் முழுவ தும் மாவட்டத் தலைநகரங்களில் அரைநாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டம் சார்பில் நந்தனத்தில் தர்ணா நடைபெற்றது. இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய நெ.இல.சீதரன், “6 மாத கால அகவிலைப்படி நிலுவை யை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பணிநிறைவு நாளில் தற்காலிக பணிநீக்கம் செய் வதை கைவிட வேண்டும், ரயில் கட்டண பயண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முழுவதும் இந்த போராட்டம் நடை பெற்றது” என்றார்.

“ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டார். ஊழியர்கள், ஓய்வூதியர்களின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். அதனை பொய்ப்பிக்கும் வகையில் அவரது உரை இருந்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், 80 வயதில் பெற வேண்டிய ஓய்வூதியத்தை 70வது வயதிலேயே வழங்குவோம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறியது. குறைந்தபட்சம் அதற்கான அறிவிப்பை கூட வெளியிட வில்லை. தேர்தல் அறிக்கையில் கூறிய அம்சங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ‘ஓய்வூதியத்தை பாதுகாப் போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி அக்.1 உலகளவில் ஓய்வூதியர்கள் போராட்டம் நடை பெறும். நவ.3ஆம் தேதியை ஓய்வூதியர் தேசிய தினமாக அகில இந்திய மாநில அரசு ஓய்வூ தியர் சம்மேளனம் சார்பில் அறிவித்து ள்ளது. அன்றையதினம் ஓய்வூதியர் தினம் கடைபிடிக்கப்படும்” என்றும் நெ.இல.சீதரன் கூறினார். இந்த தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமை தாங்கினார். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன பொரு ளாளர் சீனிவாசன், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி, பொரு ளாளர் ஜெ.பட்டாபி நிர்வாகி கள் நா.மனோகரன், எஸ்.ஏ.முபாரக் பாட்சா, எஸ்.ஏ.வெற்றிராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மு.சாந்துனி சையத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர் கே.வீரராகவன் நிறை வுரையாற்றினார்.

;