tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்குக! சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்குக!  சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப். 11-  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சாலை பணியாளர் சங்க கட்டிடத்தில் வியாழனன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் பி. செல்லத்துரை தலைமை தாங்கினார்.  மேனாள் மாநில துணைத் தலைவர் ஏ. பெரியசாமி துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கூட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, திருச்சி மாவட்ட தலைவர் அமுதா வரவேற்றார். மாநில பொருளாளர் சித்ரா நன்றி கூறினார்.