tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஆக. 23-  தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த பருத்தி ஏலத்தில், 843 விவசாயிகள், 105 மெட்ரிக் டன் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் பண்ருட்டி, செம்பனார்கோவில், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், கொங்கணாபுரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் கலந்து கொண்டு, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,839, குறைந்தபட்சம் ரூ.6,839, சராசரி ரூ.7,425 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ.78 லட்சம்.

பண்ணை கருவிகள் இயந்திரமயமாக்கல் பயிற்சி

பாபநாசம், ஆக. 23-  அட்மா திட்டம் 2025-26-ன் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, பசுபதி கோவிலில் பண்ணை கருவிகளை இயந்திரமயமாக்கல், இயந்திரங்களை பிரபலப்படுத்துதல், இ-வாடகை பயிற்சி நடந்தது.  பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக் முன்னிலை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம், சாக்கோட்டை) அய்யம் பெருமாள் வேளாண்மைத் துறையின் திட்டங்கள், உழவர் செயலியின் பயன்கள் பற்றி பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மாவட்ட ஆலோசகர் இளஞ்செழியன் பண்ணை கருவிகளை இயந்திரமய மாக்கல், இ- வாடகையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதீஸ் குமார், குரு சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் நித்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.