தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி செவ்வாயன்று (செப் 23) மாவட்டத் தலைவர் எழில் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பரிசீல வான சாஸ்திரி, பொருளாளர் ஆனந்தபாபு, துணைத் தலைவர்கள் மகேஸ்வரி, சரவணன், பூபதி, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் புஷ்பராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கீதா, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முரளி தாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மாவட்ட இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.