10 நாட்களுக்குள் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் உறுதி!
சிபிஎம் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி
தருமபுரி, ஆக.13- தருமபுரி மாவட்டத்தில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து, 10 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் கணிச மாக வாழ்ந்து வருகின்றனர். இங் குள்ள பெரும்பகுதி மக்களுக்கு சொந்த நிலம் இல்லை; பலருக்கு வீடு இல்லை. விவசாயக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு கட்டி குடியிருப் போருக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பாலக்கோடு, வெள் ளிச்சந்தை, மாரண்டஅள்ளி ஆகிய மூன்று வருவாய் ஆய்வாளர் அலு வலகம் முன்பு மனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வருவாய் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் வட்டக்குழு உறுப்பி னர் பி.முருகன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளிசந்தையில் வட்டக்குழு உறுப்பினர் சி.ராஜா தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மாரண்டஅள்ளி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன் உட்பட திரளா னோர் பங்கேற்றனர். இதையடுத்து பாலக்கோடு வருவாய் அலுவலகத் தில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. அதில், 10 நாட்களுக்குள் மனை பட்டா வழங்குவதாக வருவாய் அலு வலர் எழுத்துபூர்வமாக உறுதியளித் தார்.