தொழிற்பயிற்சித் துறை இயக்குநரகம் முன்பு அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
சென்னை, ஜூலை 2 - தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதனன்று (ஜூலை 2) சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நர் அலுவலகம் முன்பு அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களை, மத்திய பயிற்சி இயக்குநரகம் வழிகாட்டு தல் படி 1:1 என்ற விகிதத்தில் நியமிக்க வேண்டும், அனைத்துநிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி அரசு மற்றும் தனியார் கூட்டு மற்றும் திறன்மிகு தொழிற்பயிற்சி திட்ட தொகுப்பூதிய பயிற் றுநர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை உதவியாளர்களின் தொகுப் பூதிய காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும், பதவி உயர்வு மற்றும் காலமுறை இடமாற்றத்தை கலந்தாய்வு முறையில் வழங்க வேண்டும், திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனை வோர் அமைச்சகம் வழிகாட்டுதல் படி சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அர சாணை 36-இன் படி நியமிக்கப்பட உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்களை முறையான நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் இந்தப் போ ராட்டத்தை நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொருளாளர் சா. டானியல் ஜெயசிங் தொடங்கி வைத் தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத் தின் பொதுச்செயலாளர் என். ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து இயக்குநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினர். கோரிக்கைகளை நிறை வேற்ற நிர்வாகம் முன்வராததால் ஊழி யர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.