tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கோரை வாய்க்கால்  அடைப்புகள் தூர்வாரப்படும் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், ஜூலை 20 - தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருக்காட்டுப் பள்ளி சரகம், தீட்சசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கோரை வாய்க்காலை அகலப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத, பூதலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முல்லைக்குடி கிளை சார்பில், திருக்காட்டுப்பள்ளி - பூத லூர் சாலையில், பிள்ளை வாய்க்கால் பாலம் அருகில்  சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. இது தொடர்பாக, பூதலூர் தாலுகா அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இக்கூட்டத்தில், அரசு தரப்பில் வட்டார வளர்ச்சி  அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர், காவல்துறை யினர், திருக்காட்டுப்பள்ளி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில், முல்லைக்குடி கிளைச் செயலாளர்  தர்மராஜ், ஒன்றிய அமைப்புக் குழு நிர்வாகிகள் முரு கேசன், எம்.கே.சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “பூதலூர் வட்டம் முல்லைக்குடி பிள்ளை வாய்க்கால் கரையில் தற்போது வைக்கப்பட் டுள்ள கோரை வாய்க்கால் தூர்வாரப்பட்டது என்ற  தகவல் பலகையில் ஏற்பட்ட தவறினை திருத்தம் செய்வது,  கிளை வாய்க்கால்கள்தான் தூர்வாரப்பட்டது என்றும், வடிகால் வாய்க்காலான கோரை வாய்க்காலில் உள்ள அடைப்புகளை ஒரு வாரத்திற்குள் சுத்தம் செய்து தருவது,  கோரை வாய்க்கால் வடிகால் ஜேசிபி மூலம் தூர்வாரிட  நடவடிக்கை எடுக்கப்படும், 100 நாள் வேலையின் போது,  வேலை கொடுத்தவருக்கே மறுபடியும் கொடுக்காமல், சுழற்சி முறையில் கிராம மக்கள் அனைவருக்கும் வேலை  வழங்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.  திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவி லான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப் படவுள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை கல்வித் தகுதி களையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சுய விவரக் குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார்  அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய வற்றுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாம் ஜூலை 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் திருச்சி, கண்டோன்மென்ட், பாரதி தாசன் சாலை, மேற்கு தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். மேலும்,  தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.