tamilnadu

img

அரை குறை ஆடைகளுடன் சண்டை போடும் ‘குடிமகன்கள்’ மதுக்கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி

அரை குறை ஆடைகளுடன் சண்டை போடும் ‘குடிமகன்கள்’ மதுக்கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி

நாமக்கல், ஆக.1- பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி யாக்கி வரும் மதுபானக் கடைகளை அகற்று வதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பழனி நகர் மற்றும் ஐந்து ரோடு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரு கின்றன. இந்த இரண்டு கடைகளும் அமைந் துள்ள பகுதி, பொதுமக்கள் அதிகளவில் வசிக் கக்கூடிய பகுதிகளாகும். மதுக்கடைக்கு வந்து செல்லும் நபர்கள்,  போதையில், நடு  சாலையில் அரை குறை ஆடைகளுடன் உறங்குவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சத்திற்குள்ளாகி வருகின்ற னர். இதன் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச் சனையும் ஏற்படுகிறது. இதனால் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர், மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டு மென, டாஸ்மார்க் நிர்வாகம் காவல்துறை  வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்து வந்தனர். ஆனால், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக மதுபானக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண் டும் என வலியுறுத்தி வியாழனன்று எருமப் பட்டி பகுதியில் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை வகித்தார். காலை துவங்கி மாலை  7 மணி வரை போராட்டம் நடைபெற்ற நிலை யில், மதுபானக் கடையை முற்றுகையிட விவ சாயிகள் சங்கத்தினர் முடிவெடுத்தனர். இதை யடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டாஸ்மாக் நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஒரு மாத காலத்திற்குள் இரண்டு கடைகளையும், வேறு இடத்திற்கு மாற்றுவ தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், எருமப்பட்டி பகுதியில் செயல்படக் கூடிய சட்ட விரோத சந்து கடைகள் அகற்றப் படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்த னர். அதன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் விவசா யிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி. பெருமாள், ஒன்றியத் தலைவர் மு.து.செல்வ ராஜ், நிர்வாகிகள் மாலா, கருப்பண்ணன், சிவசங்கர், தினேஷ்குமார், சிவா, சசிகுமார், திருப்பதி உட்பட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.