tamilnadu

img

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு: சிபிஎம் குழு ஆய்வு

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு: சிபிஎம் குழு ஆய்வு

சிதம்பரம், அக். 23- கடந்த சில தினங்களாகக் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை யின் காரணமாக பல்வேறு பகுதி களில் தண்ணீர் தேங்கி விவசாய விளைநிலங்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தலை மையில் விவசாயப் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சி யாகச் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் ஒன்றியச் செய லாளர் விஜய், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குளஞ்சியப்பன், தனசேகர் ஆகியோர் கொண்ட குழு அரியகோஷ்டி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களி டம் பேசிய ஆய்வுக் குழுத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, "பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, கொத்தடை ஆகிய ஊராட்சிகளில் உள்ள 700க்கும் மேற்பட்ட ஏக்கர் தற்போதைய மழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் இதுவரை அப்பகுதி பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை. அங்கி ருந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புவனகிரி வட்டாட்சியர் ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அரசு இன்னும் கணக்கெடுக்க உத்தரவிடவில்லை என்று கூறு கின்றனர். அப்பகுதி விவசாயிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பொதுப்பணித் துறையால் பாரதி வடிகால் வாய்க்கால் குறுக்கே பாதைக் காகப் பாலம் அமைக்கப்பட்டது. முறையாக ஆய்வுகள் ஏதும் செய்யாத அதிகாரிகள் கட்டிய பாலத்தினால் வெள்ளநீர் வடி யாமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஆண்டுதோறும் பயிர் களைச் சேதப்படுத்தி வருகிறது. எனவே இப்பாலத்தை மறு ஆய்வு செய்து வேகமாக வெள்ள நீர் வடிய புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பது எங்களைப் போன்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்கின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பலமுறை மனு கொடுத்த பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு 15வது நிதிக் குழு மானிய நிதியில் இப்பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனப் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களால் ஒப்புதல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் மழைநீரில் மூழ்கிப் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன. எனவே அப்பகுதி விவசாயி கள் மிகவும் மனவேதனையில் உள்ள சூழலில் அரசு அதிகாரி கள் பாதிக்கப்பட்ட நிலத்தைப் பார்வையிட்டு, கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்ய வேண்டும் எனவும், பொதுப்பணித்துறையால் முறை யின்றிக் கட்டப்பட்ட பாலத்தினை இடித்துவிட்டுப் புதிய பாலம் அமைத்து, அப்பகுதி விவசாயிகளைப் பாதுகாத்திட வேண்டும்" என்று கூறினார்.