tamilnadu

img

பேராவூரணியிலிருந்து கோவைக்கு புதிய பேருந்து இயக்கம்

பேராவூரணியிலிருந்து  கோவைக்கு  புதிய பேருந்து இயக்கம்

தஞ்சாவூர், ஜூலை 17-  பேராவூரணியில் இருந்து கோவைக்கு, புழக்கத்தில் இருந்த பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து இயக்கி வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து, கோவைக்கு தினசரி காலை 9.10 மணிக்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பேராவூரணி பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர் வழியாக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து, வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கொடியசைத்து புதிய பேருந்தை துவக்கி வைத்து, டிக்கெட் எடுத்து சிறிது தூரம் பயணித்தார்.  இதில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் எஸ்.ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம், பேராவூரணி திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொமுச இளமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர்.