tamilnadu

img

அன்பு ஜோதி ஆசிரமத்தில் போதைப் பொருள்கள்: தேசிய குழந்தைகள் ஆணையர் தகவல்

விழுப்புரம், மார்ச் 14- அன்புஜோதி ஆசிரமத்திற்கு ஐந்து மாநிலங்களிலிருந்து போதைப்  பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள் ளதாக தேசிய குழந்தைகள் ஆணையர் தெரிவித்தார்.  விக்கிரவாண்டி குண்டலப்புலியூரி லுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையர் ஆனந்து செவ்வாயன்று (மார்ச் 14) ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ஆசிரமத்தில் உள்ள 2 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் வருவாய்  துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்து கூறியதாவது:- சாலையோரத்தில் பிச்சை  எடுத்தவர்கள், ஆதரவற்ற நிலையில் சுற்றியவர்களை ஆசிரமத்திற்கு அழைத்து வந்து கை, கால்களை உடைத்து காப் பகத்தில் அடைத்துள்ளனர். அவர்க ளுக்கு போதைப் பொருள் வழங்கி  பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள னர். இந்த போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 அறைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 60 பேரை தங்க வைக்க மட்டுமே அனுமதி பெற்று  140 பேரை தங்க வைத்தது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. இதே  போல பெங்களூரு காப்பகத்தி லும் ஆதரவற்றோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அங்கும் சென்று ஆய்வு  செய்ய உள்ளேன். மேலும், இவர்கள் 5 மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக தனி விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.