tamilnadu

பந்தலடி டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை

பந்தலடி டாஸ்மாக் கடையை உடனே  அப்புறப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும்

மன்னார்குடி, ஜூலை 7-  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பந்தலடி டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மன்னார்குடி நகர பத்தாவது மாநாடு, தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. மாதர் சங்கத்தின் நகர மாநாடு எஸ். சகாயராணி தலைமையில் நடைபெற்றது.  மாநாட்டில், எம்.சசிகலா தலைவராகவும், எஸ். சகாயராணி செயலாளராகவும், ஆமினா பொருளாளராகவும், எம். பாப்பாத்தி, எஸ். தர்ஷினி துணைத் தலைவர்களாகவும் டி. சரஸ்வதி, ஆர். சுமதி துணைச் செயலாளர்கள் ஆகவும், எம். முத்துலட்சுமி, புவனேஸ்வரி நகரக் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட  வேண்டும். அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் பி. கோமதி நிறைவுரையாற்றினார்.