tamilnadu

img

ஜனநாயகத்தை ஒழித்துக் கட்ட மோடி அரசு சதி!

ஜனநாயகத்தை ஒழித்துக் கட்ட மோடி அரசு சதி!

“பீகாரில் மகா கூட்டணி தேர்தலைப் புறக்கணித்தால் நாங்களும் அதை ஏற்போம்”

எம்.ஏ.பேபி கடும் கண்டனம் தஞ்சாவூர், ஜூலை 26- பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டிய லில் “சிறப்பு தீவிர திருத்தம்” என்ற பெயரில்  மோடி அரசு மேற்கொண்டுவரும் முறைகேட் டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இதற்கு எதிராக பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை மகா கூட்டணி புறக்கணித்தால், அந்த  முடிவை தங்கள் கட்சியும் ஏற்கும்” என்று அவர்  அறிவித்துள்ளார். ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் சதி தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25)  மாலை நடைபெற்ற தியாகி என். வெங்கடா சலம் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய எம்.ஏ. பேபி, “தேசிய அளவில் இன்றைய ஒன்றிய  ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை யும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டுவதற்கான அத்தனை வேலை களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று  கடுமையாகக் கண்டித்தார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு “தேர்தல் ஆணையம் எந்தவொரு தேசியக் கட்சிகளுடனும், மாநிலக் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் இந்த ‘சிறப்பு தீவிரத் திருத்தத்தை’ அறிவித்துள்ளது” என்று எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார். “பாஜகவுக்கு வாக்க ளிக்கமாட்டார்கள் எனக் கருதப்படும் வாக்கா ளர்களை நீக்கும் வேலையிலும், தங்களுக்கு  சாதகமான வாக்காளர்களை சேர்க்கும் வேலை யிலும்- ஆர்எஸ்எஸ்-இன் சதித்திட்டத்தின் ஒரு  பகுதியாக-  தேர்தல் ஆணையம் இறங்கியிருக்கி றது” என்று அவர் தெரிவித்தார். விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகள் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஏ. பேபி, “வாக்காளர் பட்டியலில் ஒருபுறம்  பெயர்கள் நீக்கப்படும் நிலையில், மறுபுறம் சேர விரும்பும் நபர்களை தற்போது அமலில்  இருக்கும் விதிகளை மீறிச் சேர்க்க வேண்டும்  என வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். “வாக்காளர் பட்டியலில் முன்பு, 6 மாதங்கள்  ஒரு முகவரியில் இருப்பவர்களைச் சேர்க்கலாம்  என்ற விதிமுறைகளை மீறி 2 நாட்கள் இருந்தால்  கூட சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் வேறு மாநில ஆட்களை தேர்தல் நடக்கும் மாநில வாக்காளர்  பட்டியலில் இணைத்து, அம்மாநில தேர்தல் முடி வுகளைச் சீர்குலைப்பதற்கு முயல்வதாகத் தெரிகிறது” என்று அவர் குற்றம்சாட்டினார். மகா கூட்டணியின்  நிலைப்பாட்டிற்கு ஆதரவு ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி, இந்த முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவு பரிசீலனையில் இருப்பதாக தெரிவித் துள்ள நிலையில், “இது தொடர்பாக அந்த மாநி லத்திலுள்ள மகா கூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்” என்று எம்.ஏ. பேபி அறி வித்தார். 2026 தேர்தல்களில்  எச்சரிக்கை தேவை “அடுத்த ஆண்டு கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், இப்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்”  என்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில் எச்ச ரித்த எம்.ஏ. பேபி, “2026-இல் தமிழ்நாடு, கேரளம்,  பாண்டிச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய  ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற விருக்கின்றன. இந்தத் தேர்தல்கள் மிகவும் முக்கி யமானவை” என்று குறிப்பிட்டார். பாஜக - அதிமுக கூட்டணியை மீண்டும் வீழ்த்துவோம் “தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராகவும், நாட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படும்  பாஜகவையும் அதனுடன் கைகோர்த்துவரும் அதிமுகவையும் வீழ்த்திட தோழர் என். வெங்க டாசலம் நூற்றாண்டு தினத்தில் சபதம் ஏற்போம்”  என்று மக்களுக்கு அழைப்பு விடுத்த  எம்.ஏ. பேபி, “தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நியாய மான நிதியை ஒதுக்காத பாஜகவுடன், கல்விக்கு  அளிக்க வேண்டிய நிதியை அளிக்க மறுத்திடும்  பாஜகவுடன் அதிமுக கூட்டு சேர்ந்திருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார். ஒன்றிய அரசின்  எதேச்சதிகார அணுகுமுறை “நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதி கள் கூட்டத்தில் முடிவு செய்யும் முறை, நடை முறையில் இருந்தது. ஆனால், நரேந்திர மோடி - அமித்ஷா வந்த பிறகு, இந்த நடைமுறை பின்  பற்றப்படுவதில்லை. மேலிருந்து கீழே உத்தர தொடர்ச்சி 3 ஆம் பக்கம்