மோடி அரசின் தன்னிச்சையான அறிவிப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் இனி கிடையாது
புதுதில்லி, செப். 10 - அத்தியாவசிய கனிமங்களுக் கான சுரங்கத் திட்டங்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டங்கள் இனி நடத்தப்படாது என்று ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி இந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு ள்ளதாக மோடி அரசு கூறியுள்ளது. சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக, சுரங்கத் திட்டம் அமையும் பகுதி யிலுள்ள மக்களின் கருத்துக்களை கேட்டாக வேண்டும். ஆனால், இந்த விதியை ஒன்றிய பாஜக அரசு மாற்றியமைத்துள்ளது. அணுசக்தி, பாதுகாப்புக்குத் தேவையான கனிமங்கள் குறித்த திட்டங்களுக்கு கருத்து கேட்பு நடத்தப் படாது. யுரேனியம், தோரியம், லித்தி யம், கோபால்ட் போன்ற அத்தியா வசிய கனிமங்கள், நாட்டின் பாது காப்புக்கு முக்கியம் என்பதால், இந்த கனிமங்களுக்கான பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வே இந்த நடவடிக்கை எடுத்திருப்ப தாக ஒன்றிய பாஜக அரசு கூறி யுள்ளது. மோடி அரசின் இந்த புதிய விதி யால், கருத்துக் கேட்பு கூட்டம் நடை பெறாமலே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படும். அணுசக்தி, பாதுகாப்பு க்குத் தேவையான கனிமங்கள் தொடர்பான திட்டங்களுக்கு கருத்து கேட்பே இருக்காது. ஒன்றிய பாஜக அரசின் இந்த புதிய விதிக்கு சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. பாதுகாப்புப் பிரச்சனையை ஒன்றிய அரசு காரணமாகக் காட்டினா லும், உண்மையில் அரிய வகை கனி மச் சுரங்கங்களை பெருமுதலாளி களுக்கு தூக்கிக் கொடுப்பதற்காகவே விதிகளை தன்னிச்சையாக மோடி அரசு மாற்றியமைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.