மாநில அளவிலான சதுரங்க போட்டி அமைச்சர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம், ஆக.11- இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனியன்று பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாநில அளவிலான சதுரங்க போட்டி யை வனம் மற்றும் சுதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின்சாரம் தாக்கி மாணவி பலி
மதுரை, அக்.11- மதுரை சோழவந்தா னில் வீட்டின் மேல் மாடி யில் துணியை எடுக்க சென்ற போது உயர் அழுத்த மின்சா ரம் தாக்கி ஏழாம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ உயிரிழந்தார். மதுரை மாவட்டம் சோழ வந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி. இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை விபத்தில் கை கால் கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் வீட்டில் உள்ளார். இவரது மனைவி தவமணி தேவி சோழ வந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் தற்காலிக பணியாளராக பணி செய்து வருகிறார். இந்த நிலையில் விடு முறை தினமான சனியன்று சுபஸ்ரீ வீட்டின் மாடியில் துணியை எடுக்க சென்ற போது உயர் அழுத்த மின் மின்சாரம் தாக்கியதால் மயக்கம் அடைந்த நிலை யில் இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரி யவருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
போடி அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
தேனி, அக்.11- போடி மல்லையன் தெருவைச் சேர்ந்த வர் ரெங்கசாமி மகன் செந்தில்குமார் (44). இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக் கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட செந் தில்குமார், சனிக்கிழமை இரவு சாலை காளியம்மன் கோயில் பக்கம் சென்றுள் ளார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் அங்கு சென்று பார்த்தபோது காளியம்மன் கோயில் அருகே மயங்கி கிடந்துள்ளார். மகன் மற்றும் உறவினர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றுள்ளனர். அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.