tamilnadu

மின் வாகன உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி மோட்டார் இந்தியா புதிய திட்டம்

மின் வாகன உற்பத்தியை  அதிகரிக்க  எம்ஜி மோட்டார் இந்தியா புதிய திட்டம்

சென்னை, ஜூலை 26- சர்வதேச அளவில் விரி வாக்கத்தில் கவனம் செலுத்தி, மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி மோட்டார் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்ட மிட்டுள்ளது ஆட்டோ மொபைல் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியா  மின்சார வாகன துறையில் வலுவான வாய்ப்பை பெற்று வருகிறது. உள்நாட்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளிலும் அதன் மின்சார வாகனங் கள் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இரண்டு-மூன்று ஆண்டு களில் உற்பத்தியை அதி கரிக்க திட்டமிட்டுள்ளது.  எம்ஜியின் தற்போதைய ஆண்டு நிறுவு திறன் குஜ ராத்தில் உள்ள  ஹலோல் ஆலையில் 110,000 யூனிட் களாக உள்ளது. இங்கு முழு அளவில் உற்பத்தி நடை பெற்று வருகிறது. பேட்டரி உற்பத்தி மற்றும் பெயிண்ட்  ஷாப் போன்ற சில பிரிவுகள் ஏற்கனவே மூன்று ஷிப்டு களில் இயங்குகின்றன. தற்போது பல்வேறு வகைகளில் மாதத்திற்கு 6,000-7,000 கார்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும் 2025 ஆம் ஆண்டு க்குள் 72,000 யூனிட்களை எட்ட திட்டமிட்டுள்ளது என்று ஜேஎஸ்டபிள்யு – எம்ஜி மோட்டார் நிறு வனத்தின் துணை நிர்வாக இயக்குனர் பிஜு பாலேந் திரன் தெரிவித்தார். முன்ன தாக சென்னை நந்தனத்தில்  எம்ஜி செலக்ட் அனுபவ மையத்தைத் அவர் விநியோ கஸ்தர்களுடன் திறந்து வைத்தார்.