tamilnadu

img

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பள்ளியில் நினைவு மண்டபம்

சுதந்திரப்  போராட்ட தியாகிகளுக்கு பள்ளியில் நினைவு மண்டபம்

அருமனை, ஆக.16 - கேரள மாநிலம் திருவ னந்தபுரம் மாவட்டம் காரக் கோணம் அருகே குந்நத்துக் கால் ஸ்ரீ சித்திரத் திருநாள் ரெசிடென்சியல் சென்டரல் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.  சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளை யும் நாட்டைக் காக்கும் போ ராட்டத்தில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களையும் நினைவு கூரும் வகையில் பள்ளி வளாகத்தில் நினைவு மண்டபம் அமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.பள்ளியின் தாளாளரும் செயலாளருமான சதீஷ்குமார் வரவேற்றார்.  பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்ப வல்லி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி னார். தீயணைப்புத்துறை கமாண்டர் ராகஸ்ரீ  டி  நாயர் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து  உரையாற்றினார்.  பள்ளி மாணவ ,மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.