மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை தொடங்கப்படாது
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சிவகங்கை, செப்.21– சிவகங்கை மாவட்டம் மானா மதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படாது என தமிழக நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார். ஞாயிறன்று திருப்புவனம் தாலுகா கீழடியில் நடைபெற்ற நூலக திறப்பு விழா வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு, மானாமதுரை சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்து போராட்டக் குழு தலைவர் கே.வீரபாண்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முனியராஜ், சமூக ஆர்வலர் பாரி வள்ளல், விவசாய சங்க செயலாளர் பரமாத்மா, செந்தில் உள்ளிட்டோர் மனு அளித்து பேசி னர். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “இத்தகைய தொழிற் சாலையால் ஏற்படும் பாதிப்பை நான் நன்கு அறிவேன். எனவே மானா மதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை கட்டாயம் வராது; வர விடமாட்டோம்” என உறுதி அளித்தார். அமைச்சர் பெரியகருப்பனும் இதனை ஒப்புக்கொண்டு, “அந்த தொழிற்சாலை வரு வதற்கான வாய்ப்பே இல்லை” எனத் தெரி வித்தார்.