tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘மக்கள் ஆவேசப் பேரணி’

மார்க்சிஸ்ட் கட்சியின் ‘மக்கள் ஆவேசப் பேரணி’

1 லட்சம் பேர் திரண்டனர்; ராம்லீலா மைதானம் சிவந்தது

புதுதில்லி, மார்ச் 24- ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள், கார்ப்பரேட் ஆதரவுப் போக்கு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதி ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைநகர் தில்லியில் மார்ச் 24 செவ்வாயன்று நடைபெற்ற ‘மக்கள் ஆவேசப் பேரணி’ (ஜன் ஆக்ரோஷ் பேரணி) ஒரு அதிர்வலையை ஏற் படுத்தியுள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் திரண்ட சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் இந்த எழுச்சியும் ஆவேச மும், பா.ஜ.க அரசுக்கு எதிரான ஒரு  மாற்று மக்கள் சாசனத்தை பிரகட னப்படுத்தியுள்ளது. 33 பிரச்சாரப் பயணங்களின் எழுச்சிமிகு சங்கமம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆவேசப் பேரணி தன்னிச்சை யாக உருவான ஒன்று அல்ல. கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 20 வரை வட இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், இமா சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா,  ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதே சம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க் கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 33  ‘மக்கள் ஆவேசப் பிரச்சாரப் பயணங் கள்’  நடைபெற்றன. 23 நாட்கள் நீடித்த இந்தப் பிரச்சாரப் பயணங்களின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப் பட்டன. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இந்தக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை விளக்கும் 35,000 கையேடுகள் விற்கப்பட்டதோடு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன. கலைக்குழுவினரின் வீதி நாடகங்கள் மற்றும் புரட்சிகரப் பாடல்கள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே செவ் வாயன்று  மேற்கண்ட 11 மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் தில்லியில் குவிந்தனர். மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான வாழ்வாதாரக் கோரிக்கைகள் இந்தப் பேரணியில் முன்வைக்கப் பட்ட முதன்மையான கோரிக்கைகள் அனைத்தும் எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் நாட்டின் தற்சார்பையும் சார்ந்தவை யாக இருந்தன: தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஊரக வேலை உறுதித் திட்டம்: தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பறிக்கும்  நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மாற்று வடிவமான புதிய திட்டங்களைக் கைவிட்டு, ஏழை மக்களுக்கான வேலை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமை: சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்து ரைப்படி அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும். விதைச் சட்டத் தில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாகக் கொண்டு வரப் படும் திருத்தங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். Kமின்சாரச் சட்டம் மற்றும் தனியார் மயம்: மின்சாரத் துறைச் சட்டத்திருத் தங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுத்துறை மின் விநியோக நிறு வனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். Kஇந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: இந்திய விவசாயிகள் மற்றும் சிறு- குறு தொழிலாளர்களின் நலன்க ளுக்கு எதிராக, அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு அடிபணியும் வகை யில் போடப்பட்டுள்ள வர்த்தக ஒப் பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய பிரதான கோரிக்கைக ளுக்காகவே இந்த பேரணி நடை பெற்றது. “ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கலைப்போம்” போராட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் எம்.ஏ. பேபி, ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளைக் கடுமையா கச் சாடினார். “இன்று தில்லியில் கூடி யுள்ள இந்த ஒரு லட்சம் மக்களின் முழக்கங்கள், செங்கோட்டையில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கலைக்கும். தேர்தல் அரசியல் ஒருபுறம் இருந்தாலும், சாமா னிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்ச னைகளைத் தீர்ப்பதற்கே மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் முத லிடம் அளிக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் குரலாக இந்தப் பேரணி ஒலிக்கிறது,” என்று அவர் முழங்கினார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் சமை யல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் குறிப் பிட்ட அவர், “பயிர்த்தொழில் முதல் சிறு  வணிகங்கள் வரை அனைத்தும் முடங்கி வருகின்றன. வாரணாசி போன்ற புனிதத் தலங்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் கூட எரிவாயு உருளைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தற்போதைய கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டினார். கட்சியின் மூத்த தலைவர்கள் பிர காஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பி.வி. ராகவலு, நிலோத்பல் பாசு, தபன் சென், டாக்டர் அசோக்  தாவ்லே, அம்ரா ராம் எம்.பி., மரியம் தாவ்லே, டாக்டர் விஜு கிருஷ்ணன், ஆர்.அருண்குமார் உள்ளிட்ட கட்சியின் அகில இந்தியத் தலைவர்க ளும் மேடையில் அனல் பறக்கும் உரை களை ஆற்றினர். மதவாத அரசியலைப் பரப்பி மக்களின் உண்மையான பிரச்ச னைகளைத் திசைதிருப்பும் பாஜகவின் தந்திரத்தை, மக்கள் துல்லியமாகப் புரிந்துகொண்டுவிட்டனர் என்பதை இந்த மக்கள் ஆவேசப் பேரணி நிரூபிக்கிறது என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். தியாகிகள் தினத்தின் பின்னணியில் மக்கள் எழுச்சி பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய புரட்சியாளர்களின் தியாகிகள் தினத்தி ற்கு  மறுநாளான மார்ச் 24 அன்று நடை பெற்ற இந்தப் பேரணி, தியாகிகளின் கனவுகளான சமத்துவ இந்தியாவை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியா கும் என்று மாநாட்டில் பிரகடனப் படுத்தப்பட்டது. கார்ப்பரேட் முதலாளி களுக்குப் பல லட்சம் கோடிகளைக் கடன் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க அர சுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஒரு மக்கள் நல மாற்றுப் பொரு ளாதாரக் கொள்கையை முன்வைக்கி றது என்று தலைவர்கள் திட்டவட்ட மாகத் தெரிவித்தனர். இந்திய அரசியலில் ஒரு புதிய விடியலின் தொடக்கம் தில்லியின் இதயப்பகுதியில் இடது சாரி இயக்கம் நடத்தியுள்ள இந்த  ‘மக்கள் ஆவேசப் பேரணி’ ஒட்டு மொத்த இந்திய உழைக்கும் வர்க்கத் திற்கும் ஒரு புதிய தெம்பையும் வழி யையும் காட்டியுள்ளது. மதவாதப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு, உழைக்கும் மக்களை வர்க்க அடிப்ப டையில் ஒன்றிணைக்கும் இத்தகைய சமரசமற்ற தொடர் போராட்டங்களே பாஜகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் தலைவர்கள் கூறினர். களத்தில் நெஞ்சுறுதியுடன் உறுதி மொழி ஏற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள், தில்லியில் இருந்து தங்களின் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று இந்த எதிர்ப்பு அலையை மேலும் வலுவான மக்கள் கிளர்ச்சி யாக மாற்றுவோம் என்ற ஆக்ரோஷ மான சூளுரையுடன் விடைபெற்றனர். லெப்ட் வியூஸ்