தியாகி தோழர் எம்.கண்மணி 31ஆம் ஆண்டு நினைவு தினம் தோழர் கண்மணி நினைவக அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
திருவாரூர், அக். 11- திருவாரூர் மாவட்டம் அம்மையப் பன் கடைவீதியில் தியாகி தோழர் எம். கண்மணி 31ஆம் ஆண்டு நினைவு தினம், தோழர் கண்மணி அலுவல கம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொரடாச்சேரி ஒன்றி யச் செயலாளர் கே.கோபிராஜ் தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செங்கொடியை ஏற்றி வைத்து, தோழர் கண்மணி நினைவு அலுவலகம் கட்டுமானப் பணியை துவக்கி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தோழர் கண்மணி யின் உருவப்படத்திற்கு மலர் வளை யம் வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி. முருகை யன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கேசவராஜ் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகி கள், அம்மையப்பன் கடை வீதி வர்த்த கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புகழஞ்சலி உரையாற்றினர். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, பி.கந்தசாமி மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப் பினர்கள், அம்மையப்பன் கட்சி கிளை தோழர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
