எல்.பி.ஜி. கேஸ் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை: நாமக்கல்லைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.9 ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டம் செவ்வாயன்று 6 ஆவது நாளாக நீடித்தது. கேஸ் டேங்கர் லாரிகள், சாலையோரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட தால், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சிலிண் டர்களில் கேஸ் நிரப்பும் தொழிற்சாலை களுக்கு கேஸ் கொண்டு செல்லும் பணி முற்றிலுமாக முடங்கியது. எனவே தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கேஸ் தட்டுப் பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண் ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாத தால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத் தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறு வனங்கள் சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து, 2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருதரப்பிடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத் துக்குத் தடை கோரிய வழக்கை உயர்நீதி மன்றம் முடித்து வைத்தது. இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.