3 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்
திருப்பூர், ஜூலை 1- உள்ளாட்சி ஊழியர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்தை முறையாக வழங்க வலி யுறுத்தி திருப்பூரில் நடத்தப்பட்டு வரும் காத்திருப்புப் போராட் டம் மூன்றாவது நாளாக புதனன்றும் தொடர்கிறது. நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சிகளில் அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனி னும் அதைக் காட்டிலும் குறைவான தொகையையே ஒப்பந்த தாரர்கள் வழங்கி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றமும் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு ஏறத் தாழ இரண்டு ஆண்டு காலமாகியும் சட்டப்படியான ஊதி யத்தை வழங்காமல் உள்ளனர். இதனைக் கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று முதல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தின் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சென்னை சென்றிருந்த நிலை யில் திங்களன்று அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வர வில்லை. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் இரண்டா வது நாளாக செவ்வாயன்றும் தொடர்ந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிஐடியு நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். கோரிக்கை குறித்து அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் தார். அத்துடன் உள்ளாட்சித் துறை சார்ந்த அதிகாரிகளும் கடி தம் எழுதுவதாக தெரிவித்துள்ளனர். எவ்வித உத்தரவாத மும் இல்லாமல் இந்த போராட்டத்தை கைவிடப் போவ தில்லை என்று சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார். எனவே புதன்கிழமையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக உள்ளாட்சி ஊழியர்களின் காத்திருப் புப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ரங்கராஜ் தெரி வித்தார்.