tamilnadu

img

கிணற்றுத் தவளைகள் கத்தட்டும்: முத்தரசன்

கிணற்றுத் தவளைகள் கத்தட்டும்: முத்தரசன்

140 கோடி மக்களை கொண்ட இந்தி யாவையே அமெ ரிக்கா மிரட்டுகிறது. ஆனால், அமெ ரிக்காவிற்கு அருகாமையில் உள்ள சின்னஞ்சிறிய கியூபா, 60 ஆண்டுக ளாக கடும் தாக்குதல்களை, விளைவு களை எதிர் கொண்டு வருகிறது. ஆயு தங்கள், போர் இன்றி அமெரிக்கா வால் கியூபாவை அழித்துவிட முடியும். ஆனாலும், உறுதியோடு அமெரிக்காவை கியூபா எதிர்த்து நிற்கிறது. பெருந்தொற்றால் பாதிக்கப் பட்டபோது பிடல் காஸ்ட்ரோ உலக நாடு களிடம் கையேந்தினார். அமெரிக்கா உதவவில்லை. வேறு எந்த ஒருநா டும் உதவி செய்யவும் தடை விதித் தார். அதனை சவாலாக ஏற்று பல்லா யிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கி, உலக நாடுகளுக்கு அனுப்பி கியூபா சேவை செய்கிறது. சோவியத் வீழ்ந்தபோது கம்யூனி ஸ்ட் கட்சி பிறந்த இடத்திலேயே புதை குழிக்கு சென்று விட்டது என்று ஒரு வாரப்பத்திரிகை எழுதியது. இப்போ தும் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்து போய் விட்டது என்று அதன் வாரிசு எழுதிக் கொண்டிருக்கிறது. கிணற்றுத் தவளைகள் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, கொள்கைகள் என்ன வென்று தெரியாமல் கத்திக் கொண்டு இருக்கின்றன. உலகம் முற்போக் கான திசை வழியைத்தான் நாடும். சோசலிசம் தான் மனித குலப் பிரச்ச னைகளுக்கு நிரந்தரத் தீர்வு. அதற் கான மாற்றானது இதுவரை பிறக்க வில்லை.