வாசிப்போம் உயர்வோம்’ திட்டம் கடலூர் மாவட்டத்தில் தொடக்கம்
கடலூர், ஆக.22- கடலூர் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாண வர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட 'வாசிப்போம் உயர்வோம்' திட்டத்தை செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார். இந்த செய்தியாளர் பயணம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்பதற்காகவும் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக வாசிப்போம் உயர்வோம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 14 ஒன்றி யங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள கிட்டத் தட்ட 150 பஞ்சாயத்துகளில் மாவட்டத்தின் முன்னெ டுப்பு முயற்சியாக கிராம நூலகக் கழகம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்த குடியிருப்புகளில் 5,146 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெற்றோர்களிடம் அனுமதி பெற்று 4,544 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இக்கல்வியாண்டில் "வாசிப்போம் உயர்வோம்" அன்னவல்லி பஞ்சா யத்தில் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் திங்கள் மற்றும் புதன் தொகுதி I, செவ்வாய் மற்றும் வியாழன் தொகுதி II என இரண்டு தொகுதிகளாக ஒரு மணி நேரம் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பார்கள். ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம், சுப்ரமணிய பாரதி யார் மற்றும் அசோகர் கதை கள்’, வானத்தில் பறந்த நரி, அலிபாபாவும் 40 திரு டர்களும், வழி தவறிய கோழிக்குஞ்சு, மண்ணாங் கட்டியும் காய்ந்த இலை யும் உள்ளிட்ட 54 கதைப் புத்தகங்கள் கிராமப்புற நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் கதைப் புத்தகத்தை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் வாசித்து காண்பிப்பார்கள். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது ஆசிரியர் தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம் போன்ற சிறப்பு நிகழ்வுகளில், மாண வர்களின் வாய்மொழி கதை (இருமொழி), எனக்குப் பிடித்த கதாபாத்திரம், கதாபாத்திரத்தின் வச னங்களைச் சொல்லுதல், கதையின் கதாபாத்திரமாக நான் இருக்க விரும்பினால், வேட நாடகம், மிமிக்ரி, ஆடம்பரமான உடை, கதை யின் உச்சக்கட்டத்தை மாற்றுதல், புத்தக மதிப்புரை போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ள "வாசிப்போம் உயர்வோம்" திட்டத்தில் வளரிளம் பருவ பள்ளி மாண வர்களை புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்திடவும், ஊக்குவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.