tamilnadu

img

கேரளத்தில் மீண்டும் எல்டிஎப் ஆட்சி! மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் உறுதி - திருவனந்தபுரம்,பிப்.16- என்.எஸ்.சஜீத்

கேரளத்தில் மீண்டும் எல்டிஎப் ஆட்சி! மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் உறுதி

கேரளத்தில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியை, ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு வருமான மணி சங்கர் அய்யர், வெகுவாகப் பாராட்டியுள்ளார். கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ‘விஷன் 2031’ சர்வதேச மாநாட்டின் தொட க்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2026 தேர்தலிலும் வெற்றிபெற்று பினராயி விஜயனே மீண்டும் கேரள முதலமைச்சர் ஆவார் என்று  தாம் உறுதியாக நம்புவ தாகக் கூறினார். உள்ளாட்சி நிர்வாகத்தில் தேசிய முன்மாதிரி மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புக்கள் மூலம் மாநி லம் முழுமைக்குமான பரவ லான வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு, ஒட்டுமொத்த நாட்டிற்கும் கேரளம் ஒரு  முன்மாதிரியாகத் திகழ்வ தாக அவர் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேர ளம் தான் காந்தியின் தொலை நோக்குப் பார்வையைச் சிறப்பாக செயல்படுத்தி வரு வதாகவும் மணிசங்கர் அய்யர் புகழாரம் சூட்டினார். காந்தியின் கனவை நனவாக்கிய சிபிஎம் “அகில இந்திய முக்கியத் துவம் வாய்ந்த இந்த நிகழ் வில், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. ஏழ்மையான மனிதரும் இது தனது நாடு  என்றும், நாட்டைக் கட்டி யெழுப்புவதில் தனக்கும் செல்வாக்கு உண்டு என்றும் உணரும் இந்தியாவே காந்தி யின் கனவாக இருந்தது. அந்த இலக்கில், கேரளம் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது.  முன்னணி நிலையை பாதுகாக்க வேண்டும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உள்ளாட்சிகளுக் கான அதிகாரம் (பஞ்சாயத்து ராஜ்) என்ற கருத்துக்களை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக கேரளத்தால் செயல்படுத்த முடிந்துள் ளது. இன்று நாட்டில் உள் ளாட்சிகளின் அதிகாரத்திற் காக குரல் எழுப்ப யாரும் இல்லை; எனவே, காங்கிரஸ் கைவிட்ட அந்தப் பணியை முதலமைச்சர் பினராயி விஜ யன் ஏற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் மணி சங்கர் அய்யர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து ராஜ் துறை யில் கேரளத்தின் முன்னணி நிலையை முழுமையாகப் பாதுகாக்க, மாநிலம் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘விஷன் 2031’ கருத்தரங்கம் 2031-ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் 75-வது  ஆண்டு நிறைவில், கேரளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரைபடத்தை வகுப்பதற்காக மாநில திட்டக்குழு ‘விஷன் 2031’-ஐ  ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வை அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்த காங்கிரஸ் கட்சி, அமர்த்தியா சென், ரொமிலா தாப்பர் மற் றும் மணி சங்கர் அய்யர் ஆகி யோர் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இதை மீறி மணி சங்கர் அய் யர் (முன்னாள் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்) நேரில் கலந்து கொண்டார். மற்ற இருவரும் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.