tamilnadu

img

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா  நிலங்களை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூலை 12- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சானமாவு, கோட்டையூர்,சென்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்களுக்கு தமிழ்நாடு  அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான நிலத்தை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று தீண்டாமை  ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு ஓசூரில் மாவட்ட துணைத் தலைவர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைச்  செயலாளர் நாராயண மூர்த்தி வரவேற்றார். துணைத் தலைவர் சி.முத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார் வேலை அறிக்கை வாசிக்க, பொரு ளாளர் சிவப்பிரகாஷ் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். இம் மாநாட்டில் நிறைவுரையாற்றி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், “மாவட்ட முழுவதும் தலித் பழங்குடி பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியின ரால் பலவகையிலும் கடும் தாக்கு தலுக்கு உள்ளாகி வரும் நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் சேர்த்து  காவல்துறையினர் வழக்கு பதிந்து  வருவது கண்டனத்துக்குரியது” என்றார். ‘கள அனுபவமும் போராட்ட மும்’ குறித்து மாநில துணைப் பொதுச்  செயலாளர் ப.செல்வன் பேசினார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சேது மாதவன், அடிமனை பயனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் அனுமப்பா,  மின்வாரிய ஓய்வூதியர் சங்க நிர்வாகி கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்  கோவிந்தசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி. ஜெய ராமன், ஓசூர் ஒன்றியச் செயலாளர்  ஆர்.கே.தேவராஜ், மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், பண்ணி ஆண்டிகள்  நல சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன்,  திராவிடர் கழக செயலாளர் வனவேந் தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானம் இம் மாநாட்டில், சாதி ஆணவ படு கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். மாவட்டம் முழு வதும் தலித் மக்களுக்கு கொடுக்கப் பட்ட வீட்டு மனைக்கான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு நிலத்தை அளவீடு செய்து விரைந்து வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பட்டியலின பழங்குடி மக்கள் குடியிருக்கும் வீடு களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும்  என்பது மற்றொரு முக்கிய கோரிக்கை யாகும். சாதி ஆணவ படுகொலை களால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு நிவாரண நிதி, நிலம், அரசு  வேலை உடனே வழங்க வேண்டும். ஓசூர் மாநகரில் மாமேதை அம்பேத்கர்  சிலையை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும். தலித் பழங்குடி பட்டியலின மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள சமூக விழிப்புணர்வு குழுவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர், செயலாளர் பெயர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பன்னியாண்டிகள் சமூக மக்கள் பன்றிகள் வளர்க்கும் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்க.தாட்கோ நிறுவனத்தில் வழங்கப்படும் கடன்கள் பட்டியல் இன மக்களுக்கு எவ்வித நிபந்தனைகள் இன்றி வழங்க வேண்டும். ஊத்தங்கரை வட்டம், வெண்ணாம்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முழுவதும் தலித் பழங்குடி பட்டியலின மக்கள் பகுதிக்கு அரசு மயானம் ஏற்படுத்த வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு சானமாவு, கோட்டையூர், சென்னத்தூர் உள்ளிட்ட  பகுதிகளில் தலித் மக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக் கான பட்டாக்களுக்கான நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஏ.ஆனந்தகுமார், செயலாளராக டி.முரளி, பொருளாளராக.சிவபிரகாஷ்  உள்ளிட்ட 30 மாவட்டக் குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.