ஜெயலலிதா வருமான வரி பாக்கி வழக்கு மாற்றம்
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் 36 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பின்னர், இந்த தொகையை செலுத்தும்படி அவரது சட்டப்படி வாரிசுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில், 36 கோடி ரூபாய் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. அந்த தொகையை 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் மீண்டும் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.சரவணன், 36 கோடி ரூபாய் செலுத்தும் படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தர விட்டார். 13 கோடி ரூபாய் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவா ரணத்தை கோர உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆயுதபூஜை-தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு
சென்னை: ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (செப். 20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் செப்.22, 29, அக். 6, 13, 20 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் செவ்வாய்க் கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்கு கன்னியாகுமரி யில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே வாரம் இரு முறை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் விளக்கம்
தஞ்சாவூர்: சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படு வது குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழி யன் விளக்கம் அளித்து உள்ளார். தஞ்சாவூரில் செய்தி யாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “செமஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வு களும் பல்கலைக்கழகங் கள், கல்லூரிகள் தொடங் குவதற்கு முன்பு வரை யறு க்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். விடுப்பு காலங் களில்தான் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள் ளும் என்றும், தேர்தலுக் காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.