tamilnadu

img

மக்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா?

மக்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா?

சென்னை, மார்ச் 24 - “எரிவாயு தட்டுப்பாட்டுப் பிரச்ச னையில் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தமது சமூகவலை தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி க்கையில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவை எதிர்கொள்ளத் தயாரானதுபோல், மேற்கு ஆசிய  யுத்தத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள வும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர். போர்ச்சூழல் தீவிர மடைந்த உடனேயே, அதன் தாக்கங் களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; வளைகுடா நாடுகளில் சிக்கி யுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்; மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என பிரத மருக்கு மார்ச் 11 அன்று கடிதம் எழுதி னேன். நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர் களுக்கு உணர்த்த மார்ச் 12 அன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.  மறுபுறத்தில், ஒன்றிய பாஜக அரசின் நட வடிக்கை களுக்குக் காத்திராமல், எரி வாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோச னை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் எல்பிஜி-க்குப் பதி லாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர் விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 2 மானியம்!  குறு-சிறு-நடுத்தர (MSME) நிறு வனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வ தற்கு மானியத்துடன் கூடிய கடன்! தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட் களைப் பயன்படுத்திக்கொள்ள டிஎன்பி சிபி (TNPCB) இசைவாணை பெறத் தேவையில்லை; உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயி களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங் களை 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் 14 அன்று வெளி யிட்டோம். இதேபோல, மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பினேன். அப்போதும் பிரதமரிடம் பதில் இல்லை. இவ்வாறு தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக்  கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார் பில் மார்ச் 15 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்க ளுக்கே பிரதமர் அறிவுரை வழங்கு கிறார். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா? மேற்கு ஆசியப் போரின் தாக்கங் களில் இருந்து இந்திய மக்களைப் பாது காக்க, பிரதமர் எடுத்துள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்று தான்: “மக்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” என்பது தான் அது! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.