tamilnadu

img

நல வாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்குக!

நல வாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்குக!

தையல் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 13 - கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் போல,  தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரிய மும் பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டு மென தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேள னத்தின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கத்தின் 7-ஆவது மாநில மாநாடு, ஆக. 12, 13 தேதி களில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இரண்டாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் சிஐடியு மாநிலச் செய லாளர்கள் ஏ. ஸ்ரீதர், எஸ். தேவமணி, மாநிலக் குழு உறுப்பினர் க. முகமதலி ஜின்னா ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிஐடியு  மாநிலச் செயலாளர் எம். தனலட்சுமி நிறைவுரை யாற்றினார். மாநிலத் தலைவராக எம். சுந்தரம், பொதுச் செயலாளராக எம். ஐடாஹெலன், பொரு ளாளராக சி. மாரிக்கண்ணு, துணைப் பொதுச்செய லாளர்களாக என். சாராள், ஆர். ஜோசப், ஜி.  குணசேகரன், துணைத் தலைவர்களாக ஆர். மாலதி, பி. கோவிந்தசாமி, பிரமிளா, பி. பொன் ராஜ், ஜெயராம், செயலாளர்களாக பி. கீதா, வி.  சந்திரகலா, எம். ஆனந்த், ஞானசேகர் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானங்கள் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் தையல் தொழி லில் ஈடுபட்டு வரும் நிலையில், தையல் தொழிலா ளர்களின் பெண் குழந்தைகளுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை  10 ஆம் வகுப்புக்கு ரூ. 2400 ஆகவும், 12 ஆம்  வகுப்புக்கு ரூ. 3,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசு களுக்கு வழங்கப்படுவதைப் போல திருமண உதவித் தொகையை ரூ. 20,000, மகப்பேறு உதவித்  தொகையை ரூ. 18,000, இயற்கை மரண நிதியை  ரூ. 50,000, விபத்து மரண நிதியை ரூ. 1,25,000  என உயர்த்தி வழங்க வேண்டும். ஆட்டோ, கட்டு மான வாரியத்தைப் போல தொழில் செய்ய உதவி  உபகரணங்கள் மற்றும் இலவசமாக தையல் எந்தி ரங்களையும் வழங்க வேண்டும். கடை வைத்து தையல் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் ஜிஎஸ்டி, மின் கட்டண  உயர்வு, மூலப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உரிமம், குப்பை வரி கேட்டு நிர்ப்பந்திப்பதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கார்மெண்ட்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26,000 வழங்க வேண்டும். மேலும், அவர் களுக்கு போனஸ், இஎஸ்ஐ, பிஎப், பணிக் கொடை போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்.  பிஎப் வசதி இல்லாத தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டுத் தொகையாக ரூ. 7  லட்சம் வழங்க வேண்டும். இலவச பள்ளிச் சீருடை  துணிகளை தனி நபர்களுக்கு தைக்க கொடுப்பதை  ரத்து செய்து மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.