tamilnadu

img

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8, தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8,  தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை, மார்ச் 24 - 2026 சட்டமன்றத் தேர்த லில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், தேசிய முற்போக்குத் திராவிடக் கழ கத்திற்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  செவ்வாயன்று பிற்பகல், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தமது கட்சி நிர்வாகிகளுடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் முத லமைச்சருமான மு.க. ஸ்டா லினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதை த்தொடர்ந்து, திமுக - விசிக  இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, 6  தனித்தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் விசிக-விற்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதேபோல மாலையில் திமுக - தேமுதிக இடையே தொகுதி உடன்பாட்டு ஒப் பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், தேமுதிக பொதுச்செய லாளர் பிரேமலதா விஜய காந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.