மதுரை சிறுவன் காவல்நிலையத்தில் அடித்து கொலை மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
மதுரை, அக்.17- மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய காவலர்களால் 2019 ஆம் ஆண்டு சிறுவன் முத்து கார்த்திக் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், விசா ரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது. மதுரை கோச்சடையைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக், குற்ற வழக்கைச் சார்ந்து 2019 ஜனவரியில் எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ், காவலர்கள் ரவிச்சந்திரன், சதீஸ்குமார் உள்ளிட்ட நால்வருக்கு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற் றப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி ஜோசப் ஜாய், நான்கு காவலர்களுக்கும் தலா 11 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தார். அதேவேளை, விசாரணையை முறை யாக நடத்தாத சிபிசிஐடி புலனாய்வாளர் மற்றும் தற்போதைய காவல்துறை கண்கா ணிப்பாளர் ராஜேஸ்வரி, உடற்கூராய்வு செய்யாத மருத்துவர்கள் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்கவும், எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தினர் கண்ணன், பிரேம்சந்திரன், அருணாச்சலம் ஆகியோ ரையும் வழக்கில் இணைத்து சிபிசிஐடி மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவிற்கு எதிராக சிபிசிஐடி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் வியாழனன்று விசாரிக்கப்பட்டது. அப்போது தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா வாதிடுகையில், “தவறு செய்த காவல் அதி காரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை வர வேற்கத்தக்கது. ஆனால் அதே வழக்கில் மீண்டும் சிபிசிஐடி மேல்விசாரணை நடத்தி அதிகாரிகளை வழக்கில் இணைக்க நீதி மன்றம் உத்தரவிட முடியாது. இத்தகைய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் மட்டுமே வழங்க முடியும்” என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, “இளை ஞர் மரண வழக்கில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும்” என்கிற நீதிமன்ற உத்தரவிற்கு இடைக் கால தடை விதித்து வழக்கை ஒத்தி வைத்தார்.