tamilnadu

இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை, அக். 4- தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.5) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “வடகிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்குத் திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் கரையை கடக்காமல் கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசும். தமிழகத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.