கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தலைமை ஆசிரியை பணி இடைநீக்கம்
புதுக்கோட்டை, ஜூலை 15- நமணசமுத்திரம் அரசுத் தொடக்கப்பள்ளியிலுள்ள கழிப்பறையை மாணவர்களே சுத்தம் செய்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்வட்டம் தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நமணசமுத்திரம் குடியிருப்பிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள கழிப்பறையை அப்பள்ளியின் மாண வர்களே சுத்தம் செய்யும் வீடியோ அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக, கல்வித் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை அப்பள்ளிக்கு நேரில் சென்று விசார ணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அப்பள்ளி யின் தலைமை ஆசிரியை கலாவை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதே பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் தினேஷ் ராஜா என்பவரை பணியிட மாறுதல் செய்ய, தொடக்கக் கல்விக்கான மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.