ரஷ்யா உதவியுடன் துப்பாக்கித் தொழிற்சாலை
புதுதில்லி, செப். 25 - உத்தரப்பிரதேச மாநி லத்தில், ரஷ்யா உதவி யுடன் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப் படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். “பாதுகாப்புத் துறை யில் நாம் விரிந்து பரந்த வளர்ச்சியை ஏற்படுத்த விருக்கிறோம், எங்கும் பயன்படுத்தும் பாதுகாப்புத் தளவாடங்களில் இந்திய தயாரிப்பு என்ற முத்திரை இடம்பெறும் வகையில் நமது முன்னேற்றம் இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.