பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 1- பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்தக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பழ.சிவகுமார் தலைமை வகித்தார். மாநில பிரச்சார செயலர் ஆ.சந்திரபோஸ், மாநிலத் துணைத் தலைவர் அ.செல்வேந்திரன், மாவட்டச் செயலாளர் வெ.தனராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு, முதுகலை ஆசிரியர்களுக்கான மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணையை உடனே வெளியிட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.