தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு மாநாடு செப்.24 அன்று சென்னையில் நடைபெறுகிறது இதனையொட்டி ஒருவார கால சமூக நலப் பணிகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று (செப்.23) மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற இயக்கத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். செல்வகுமார் தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் வீ.பார்த்தசாரதி, செயலாளர்கள் ஏழுமலை, கோபிநாதன், செல்வராணி, துணைத் தலைவர் சபி அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.