tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

கொலை வழக்கில்  இருவர் மீது குண்டர் சட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 2 -  புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) என்பவர், கடந்த ஜூன் 4  ஆம் தேதி புதுக்குளம் அருகேயுள்ள காலா குளத்தில் வெட்டிக் கொல் லப்பட்டார். இச்சம்பவத் தில் காந்திநகரைச் சேர்ந்த முகிலன் உள்ளிட்ட 7 பேரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த 7 பேரில், புதுக்கோட்டை கலீப் நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்த முகமது காலித் (21), சத்திய மூர்த்தி நகர் ஆரோக்கிய தாஸ் (28) ஆகிய இரு வரையும் குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அபிஷேக்  குப்தா அண்மையில் பரிந் துரை செய்திருந்தார். இதன்பேரில், இருவரை யும் குண்டர் சட்டத்தின்  கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு. அருணா செவ்வாய் கிழமை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் புதுக் கோட்டை சிறையில் இருந்து, திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய் யப்பட்டனர்.

கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 2 - புதுக்கோட்டை மாநக ராட்சிக்கு உட்பட்ட திரு மலை ராய சமுத்திரத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மற்றும் 7 ஆவது  சுற்று கோமாரி நோய்  தடுப்பூசி திட்ட முகாம் புதன்கிழமை நடை பெற்றது. முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரி விக்கையில், “சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மற்றும் 7 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாமை துவக்கி வைத்து, சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு விருது களும், கால்நடை வளர்ப்ப வர்களுக்கு தீவன விதை கள், தாது உப்பு கலவை,  தீவன புல் கரணை ஆகி யவை வழங்கப்பட்டன.  புதுக்கோட்டை மாவட்டத் தில் ஒன்றியத்திற்கு 12  முகாம்கள் வீதம் மொத்தம் 156 முகாம்கள் நடைபெற உள்ளன. இம் முகாம்களில் 94 குழுக் களுடன் தடுப்பூசி பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன” என்றார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை) எஸ்.கே.சீனிவே லன், பொது மேலாளர்  (ஆவின்) அ.விருச்சப்ப தாஸ், புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் பூ.யுவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோமாரி நோய் தடுப்பூசி திட்ட முகாம் தொடக்கம் தீண்டாமைச் சுவரை அகற்றுக!

பாபநாசம், ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே நெல்லி தோப்பு கிராமத்தில் அமைந் துள்ள காத்தாயி அம்மன் கோவில் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன்  30 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.  இதையொட்டி இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை  நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆர் நகர் கிளைச் செயலாளர் ராமையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன்,  விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநிலக்  குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மாவட்டக் குழு  உறுப்பினர் நம்பிராஜன், ஒன்றியச் செயலா ளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், தீண்டாமை சுவரை  அகற்ற வேண்டும். பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்க கூடாது. அறங்காவலர் குழுவில் பட்டியலின மக்க ளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது. துணை ஆணையர், நெல்லி தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள காத்தாயி அம்மன்  கோவில் மதில் சுவரைப் பார்வையிட்டும், மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்வ தாக உறுதியளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.