கடலூரில் ரூ. 45 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்
கடலூர், ஆக.4- கடலூரில் பல்வேறு வளர்ச்சி பணி களுக்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் செவிலியர்களுக்கான ரூ.8.58 கோடி மதிப்பில் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையில் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கடலூர் ஆட்சி யர் அலுவலக பழைய கட்டிடத்தை ரூ.16.20 கோடியில் பழமை மாறாமல் புனர மைத்து புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.14.15 கோடியில் 77 கடைகள், கன்வென்ஷன் சென்டர் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மைதான பகுதியை சுற்றி நடைபாதைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்பாட்டு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். கடலூர் மஞ்சக்குப்பம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே ரூ.6 கோடியில் அரசு விருந்தினர் மாளிகை கட்டும் பணிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் அனு, திமுக மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.