அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இழி பேச்சு அமைச்சர் பி. கீதாஜீவன் கடும் கண்டனம்
சென்னை, அக். 14 - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின், பெண்கள் குறித்தான இழிவான பேச்சுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் விடுத்து உள்ளார். அதில், “அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், “தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவச மாக வழங்குவார்கள்’ என மிகக் கீழ்த்தரமாக பேசியிருக் கிறார். பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப் படுத்தியிருக்கும் அவர், ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர்” என்று அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார். “மகளிர் விடியல் பயணப் பேருந்துகளை ‘லிப்ஸ்டிக் பூசிய பேருந்துகள்’ எனக் கேவலமாகப் பேசியவர் தானே எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவரின் அடிவருடியான் சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும். பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத் தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத் தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை போடுவ தாக சொன்னார் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு. “உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?” என கேவலமாக பேசினார் பாமக மகளிரணி தலைவர் சௌமியா அன்புமணி. ஒன்றிய பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, நிவாரணத் தொகையை கேலி செய்தார். இவர்களின் குணமும் நிறமும் ஒன்று தான். எனவே, பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்” என்றும் அமைச்சர் பி. கீதாஜீவன் குறிப்பிட்டுள்ளார்.