வேலூர் மாநகராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், கன்சால்பேட்டை பகுதியில் நிக்கல்சன் கால் வாயில் வண்டல்கள், திடக்கழிவுகளை அகற்றும் பணியையும், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி வெள்ளியன்று (அக்.24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ப.கார்த்திகேயன் எம்எல்எ, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
