வேதாரண்யம் அருகே கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
நாகப்பட்டினம், செப். 23- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்கி மீன் பிடிப்பதால் வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்ப தாக கூறியும், அவர்களை வெளி யேற்றக் கோரியும் போராட்டம் நடை பெற்றது. ஆறுகாட்டுதுறை கடற்பகு தியில் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளைபள்ளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கட லில் கருப்பு கொடியுடன் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல்துறை உதவி அதிகாரிகள் உடனடியாக வர வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், யாரும் வரவில்லை என் றால், கோடியக்கரை பகுதியில் கட்டி போடப்பட்டுள்ள படகுகளை, எங்கள் ஊரான ஆறுகாட்டுதுறை கொண்டு வந்து விடுவோம் என பொதுமக்கள் ஆவேசமாக கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் புதன்கிழமை அன்று போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரி வித்தனர்.
