tamilnadu

img

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோருக்கு நிதியுதவி வழங்கல்

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோருக்கு நிதியுதவி வழங்கல்

கரூர், அக்.8 - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, செப்.27 அன்று நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரி சலில் சிக்கி லேசான காய மடைந்து வீடு திரும்பிய கரூர், காமராஜபுரம் பகுதி யைச் சேர்ந்த முருகேஷ்வரி, எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் தீபிகா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, சுக்காலி யூர் பகுதியைச் சேர்ந்த   தங்கராஜ், கோடங்கிப்பட்டி யைச் சேர்ந்த சக்திவேல், தாந்தோணிமலையைச் சேர்ந்த பானுமதி, கொளந்தா னூர் பகுதியைச் சேர்ந்த  பிரபாவதி, பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹேம லதா, கருப்பாயி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சர வணன், 5 ரோடு பகுதியைச்  சேர்ந்த ஶ்ரீநிதி மற்றும் லத்திகா, வ.உ.சி. பகுதி யைச் சேர்ந்த மாரியாயி, அரசு காலனியைச் சேர்ந்த  கிருத்திகா மற்றும் வெங்க மேடு, செங்குந்தர் நகரைச்  சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட  15 நபர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. மேலும், பலத்த காய மடைந்து வீடு திரும்பிய உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த கிரிராஜ், ராயனூர்  முகாமைச் சேர்ந்த கார்த்திக் (எ) சுஜித், காளியப்ப னூரைச் சேர்ந்த ஶ்ரீ சரவணா, தாந்தோணிமலையைச் சேர்ந்த ஷாருக்கான், அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கீத்மாலா, வெங்க மேடு பகுதியைச் சேர்ந்த  செந்தில்குமார், வெங்க மேடு, செங்குந்தர் நகரைச் சேர்ந்த ஜெயந்தி மற்றும் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த லாவண்யா உள்ளிட்ட 8 நபர்களுக்கு ரூ. 1 லட்சம் என 23 நபர்களின் குடும்பத்தினருக்கு மொத் தம் ரூ.15.50 லட்சம் மதிப் பீட்டிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தலைமையில், கரூர் சட்டமன்ற உறுப்பனர் வி. செந்தில்பாலாஜி வழங்கி னார். செவ்வாயன்று, கிருஷ் ணராயபுரம் தொகுதியைச் சேர்ந்த 28 நபர்களுக்கும், அரவக்குறிச்சி தொகுதி யைச் சேர்ந்த 6 நபர்களுக்கும் காசோலைகள் வழங்கப் பட்டன.