அரசு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டாகளை உடனே வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க திருத்தணி மாநாடு வலியுறுத்தல்
திருவள்ளூர், செப்.18- அரசு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதனன்று (செப் 17), நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வி.பாலாஜி அறிக்கையை வாசித்தார். பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் துவக்கி வைத்து பேசினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். நேதாஜி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஏ.அப்சல்அகமது, செயலாளராக ஸ்ரீநாத், பொருளாளராக நேதாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும், என்.எச் 205 தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பிட்டி வழங்க வேண்டும், டி.என்.ஆர். கண்டிகைக்கு தரைப்பாலம் அமைக்க வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
