திருச்சி அரசு மருத்துவமனை அவலங்களை போக்குக! அரசை வலியுறுத்தி 5 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம்
சிபிஎம் நடத்துகிறது
திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 - அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிலவும் அவலங்களுக்கு உடனடி யாக தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 லட்சம் பொதுமக்களிடம் கை யெழுத்து பெறும் இயக்கத்தை ஜூலை 13 முதல் நடத்துவதாக அறிவித்துள்ளது. திருச்சி வெண்மணி இல்லத்தில் வியாழனன்று நடைபெற்ற பத்தி ரிகையாளர் சந்திப்பில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் இதனை அறிவித்தார். மருத்துவமனையின் நேரடி கள ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1600 படுக்கை வசதியுடன் தினசரி 5500 புறநோயாளிகள் வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கடும் பற்றாக்குறை, மருந்துகள் தட்டுப்பாடு, சுகாதார பிரச்சனைகள், குடிநீர் தட்டுப்பாடு, சிறப்பு மருத்துவ சேவைகள் இல்லாமை, மகப்பேறு வார்டுகளில் பிரசவித்த தாய்மார்கள் தரையில் படுக்க வேண்டிய நிலை, லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு அவலங்கள் நிலவுவதாக எஸ்.ஸ்ரீதர் கூறினார். ஜூலை 21 அன்று 5 லட்சம் கையொப்பங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். பேட்டியின் போது கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ரேணுகா, பா. லெனின், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர்.