tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடுக! வாலிபர் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றிடுக!  வாலிபர் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை,  செப். 29-  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 19 ஆவது  மாவட்ட மாநாடு சனிக் கிழமை துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.  ஞாயிறன்று துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம். ஐய்யப்பன் தலைமை வகித்தார்.  மாநாட்டுக் கொடியேற்ற நிகழ்வுக்கு பின் அஞ்சலித் தீர்மானத்தை மாவட்ட துணைத் தலைவர் பவுல் சத்தியராஜ் வாசித் தார். மாநாட்டின் வரவேற்புக் குழுத்  தலைவர் ஏ.ரவிச்சந்திரன் வரவேற்பு ரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். அரசியல் ஸ்தாபன வேலை யறிக்கையை மாவட்டச்  செயலாளர் ஏ.அறிவழகன் வாசித்தார்.  தீர்மானங்கள் கேசவன்பாளையத்தில் குடி யிருக்க இடம் கேட்டு தொடர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்களுக்கு உடனடியாக குடி மனை பட்டா வழங்கிட வேண்டும், அப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து  துணை நிற்பது என்றும், கனிம வளக் கொள்ளையை தடுத்திட வேண்டும். சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பொறையாரில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி, புதிய கட்டிடங்களை உடனடியாக கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில செயற்குழு உறுப்பினர் டி.அருள்தாஸ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். அபினாஷ் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர்.  நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக டி.கவி யரசன், செயலாளராக எம்.ஐயப்பன்,  பொருளாளராக மு.குமரேசன், துணை நிர்வாகிகளாக ஆர். ஸ்டா லின், ஏ.லெனின், ஜி.கார்த்திகேசன், எஸ்.கபிலன், என்.ஆனந்தி, ஜி.தீபிகா, செயற்குழு உறுப்பினர்களாக ராஜ கௌரி, விஜயகாந்த், வெற்றிசங்கர், ராமச்சந்திரன் உள்ளிட்ட 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் நிறைவுரையாற்றினார். தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் கார்த்திக்கேசன் நன்றி கூறினார்.